அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம்
2022-08-02 09:59:04

ஆப்கானிஸ்தானின் காபூலில் அமெரிக்கா கடந்த சனிக்கிழமை அல்கொய்தா அமைப்பைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி, இவ்வமைப்பின் தலைவர்  அய்மன் அல்-ஜவாஹிரியைக் கொன்றது என்று அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஆகஸ்ட் முதல் நாள் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் ஜுலை 31ஆம் நாள் ஆப்கான் தலைநகர் காபூலில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்க அதிகாரிகள் மூவர் தெரிவித்தாகவும், இதனிடேயே, ஆப்கான் தற்காலிக அரசின் செய்தித் தொடர்பாளர் முஜாஹித் அமெரிக்காவின் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்ததாகவும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.