தைவான் பிரச்சினை குறித்து அமெரிக்காவின் உண்மை நோக்கம்
2022-08-02 20:47:55

ஆகஸ்டு 2ஆம் நாள் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்து கூறுகையில் தைவான் பிரச்சினை குறித்து சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்தார்.

ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேசச் சமூகத்தின் பொது ஒத்த கருத்தாகும். பல்வேறு நாடுகளுடன் சீனா மேற்கொள்ளும் பரிமாற்றங்களுக்கு இது அரசியல் அடிப்படையாகும். சீனாவின் முக்கிய நலன்களிலுள்ள மையப் பகுதியாகும். ஆனால், தைவான் பிரச்சினை குறித்து சீனாவின் இறையாண்மை சுதந்திரத்துக்கு சில அமெரிக்க அரசியல்வாதி தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகின்றனர். தைவான் நீரிணை இரு கரை பிரதேசத்தில் வேண்டுமென்றே பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். இதை சீன மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அமெரிக்காவின் தனது மேலாதிக்கவாதத்தை உலகிற்கு அம்பலப்படுத்துகின்றது. இன்றைய அமைதியை அழிப்பதில் அமெரிக்காதான் மிகப்பெரிய சக்தியாகும் என்பதை அனைத்து நாடுகளின் மக்களுக்கும் மேலும் அறிந்து கொள்ள முடியும் என்று வாங் யீ தெரிவித்தார்.