ஆசியான் ஒத்துழைப்புடன் தொடர்புடைய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாங் யீ
2022-08-02 18:52:32

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகஸ்டு 3ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை, கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெறவுள்ள சீனா-ஆசியானின் (10+1) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஆசியான் மற்றும் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் (10+3) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் ஆசியான் பிரதேச மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.  மேலும், கம்போடிய துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான பிராக் சோகோனின் அழைப்பின் பேரில், அவர் கம்போடியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா ட்சுன் யின் தெரிவித்தார்.