அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்
2022-08-02 23:54:00

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் நான்சி பெலோசி ஆக்ஸ்ட் 2ஆம் நாள் சீனாவின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், தைவான் பிரதேசத்தை அடைந்து பயணம் மேற்கொள்கிறார். இது, ஒரே சீனா கொள்கை மற்றும் 3 சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளையும், சீன அரசுரிமை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டையும் மீறியுள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவிக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகம் 2ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

தைவான் பிரதேசம், சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். ஒரே சீனா கொள்கை, உலகளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் அவை, அமெரிக்க அரசின் ஒரு பகுதியாக, ஒரே சீனா கொள்கையைப் பின்பற்றிச் செயல்பட்டு, தைவான் அதிகார வட்டாரத்துடன் அதிகாரப்பூர்வத் தொடர்பு கொள்ளக் கூடாது. பெலோசியின் தைவான் பயணம், சீன-அமெரிக்க தொடர்புக்கு அரசியல் ஆத்திரமூட்டலாக அமைந்துள்ளது. அதை சீனாவும் சீன மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தைவான் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு நிலையாக உள்ளது. எந்த ஒரு நாடும், சக்தியும், சீனாவின் ஒருமைப்பாட்டு இலட்சியத்துக்கான மனவுறுதி மற்றும் ஆற்றலைத் தவறாக மதிப்பிடக் கூடாது. பெலோசியின் தைவான் பயணம் தொடர்பான பின்விளைவுகளுக்கு அமெரிக்காவும் தைவான் சுதந்திரப் பிரிவினை சக்தியும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா, தைவான் பிரச்சினையைப் பயன்படுத்தி, சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தி, உண்மையான செயல்களின் மூலம் அமெரிக்க தலைவர் வழங்கிய வாக்குறுதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.