உலக அமைதியைப் பேணிக்காக்கும் சீன ராணுவப் படை
2022-08-02 10:23:05

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தென் பசிபிக்கில் அமைந்துள்ள டோங்காவில் எரி மலை வெடிப்பும் சுனாமியும் நிகழ்ந்தன. சீன கடற்படை இன்னல்களைச் சமாளித்து, 5200 கடல் மைல் பயணம் மேற்கொண்டு உதவி பொருட்களை டோங்காவுக்கு அனுப்பியது. சீன ராணுவப் படை உலக அமைதியைப் பேணிக்காத்து வருவதன் அடையாளம் இதுவாகும்.

2022 ஆக்ஸ்ட் முதல் நாள், சீன மக்கள் விடுதலை நிறுவப்பட்ட 95ஆவது ஆண்டு நினைவாகும். சீன ராணுவப் படை அமைதி பேணிக்காப்பதை கடமையாகக் கொண்டுள்ளது. நவசீனா நிறுவப்பட்ட பிறகு, தற்காப்புக் கொள்கையை மேற்கொண்டு வரும் சீன ராணுவம், ஒரே ஒரு போரைக் கூடு தொடுக்கவில்லை. இதர நாடுகளிலும் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளவில்லை.

இப்போது, சீன ராணுவப் படை, சீனாவின் அரசுரிமையையும் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் பேணிக்காப்பது மட்டுமல்ல, உலக அமைதியைப் பேணிக்காக்கும் முக்கிய ஆற்றலாகவும் மாறியுள்ளது. அமைதி பாதுகாப்பு, பயணப் பாதுகாப்பு, மனித நேய மீட்புதவி முதலிய பொது பாதுகாப்பு சேவைகளை சீன ராணுவப் படை, சர்வதேச சமூகத்திற்கு அளித்து நடைமுறை நடவடிக்கைகளின் மூலம், மனித குல பொது சமூகம் பற்றிய கருத்தை விளக்கி வருவது குறிப்பிடத்தக்கது.