தைவான் பழங்கள் மற்றும் மீன்களுக்குத் தடை
2022-08-03 12:36:18

சீன அரசவையின் தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் மா சியாவ்குவாங் ஆகஸ்டு 3ஆம் நாள் கூறுகையில், குறிப்பிட்ட விதிகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு வரையறைகளின்படி, 3ஆம் நாள் முதல் தைவானிலிருந்து பெருநிலப்பகுதிக்கு அனுப்பப்படும் பப்ளிமாஸ், எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களுக்கும், ஹைல்டெல், ஹோஸ் மாக்கரெல் ஆகிய  இரு வகை மீன்களுக்கும் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படும். அத்துடன், தைவானுக்கான இயற்கை மணல் ஏற்றுமதியும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.