ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்குப் பல நாடுகள் ஆதரவு
2022-08-03 16:58:17

ஐ.நா. பொது பேரவையின் 2758ஆவது தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும் என்று ஆகஸ்டு 2ஆம் நாள் ஐ.நா. தலைமைச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் டுஜாரிக், அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் பெலோசியின் தைவான் பயணம் குறித்து பேசுகையில் அவர் மீண்டும் வலியுறுத்தினார். இத்தீர்மானம் சீன மக்கள் குடியரசின் அரசு ஐ.நா. அமைப்பில் சீனாவின் ஒரேயொரு சட்டப்பூர்வ அரசாகும் என்பதை உறுதி செய்துள்ளது மட்டுமல்லாமல், அரசியல், சட்டம் மற்றும் நடைமுறை ரீதியில் ஐ.நா.வில் சீனாவின் பிரதிநிதித்துவ உரிமைப் பிரச்சினையையும் தெளிவுபடுத்தியுள்ளது.

தவிரவும், ரஷியா, பாகிஸ்தான், ஈரான், வடகொரியா, கியூபா, வெனிசுலா, சிரியா, பாலஸ்தீனம், நிகரகுவா, கம்போடியா முதலிய நாடுகள், சீனாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அமெரிக்கா ஊறுபடுத்தும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றி நிற்பதாக உறுதிப்படுத்தின.