சீனாவுக்கான அமெரிக்கத் தூதரை வரவழைத்த சீனா
2022-08-03 16:55:34

சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஷே ஃபாங் ஆக்ஸ்ட் 2ஆம் நாளிரவு, சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் பேர்ன்ஸை வரவழைத்தார். அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் பெலோசி, தைவான் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டது குறித்து, ஷே ஃபாங் சீன அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தைத் தெரிவித்தார்.