தைவான் சுதந்திரச் சக்திக்குத் தண்டனை
2022-08-03 10:51:44

தைவான் சுதந்திரத்தில் ஈடுபடும் பிடிவாத சக்திகளுக்குச் சட்டபடி தண்டனை விதிப்பது குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தைவான் விவகார பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகஸ்ட் 3ஆம் நாள் உரை நிகழ்த்தினார்.

தைவான் சுதந்திரத்துக்கான பிரிவினை செயல் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய தடையாகவும் தேசத்தின் வளர்ச்சிக்கு கடும் இடர்பாடாகவும் உள்ளன. தைவான் பிரிவினை கூற்று மற்றும் செயல், தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கும், இருகரைகளின் சக நாட்டவர்களின் பொது நலன் மற்றும் சீனத் தேசத்தின் அடிப்படை நலனுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சட்டப்படி கண்டிப்பான முறையில் தண்டனை விகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், சீன அரசவையின் தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் மா சியாவ்குவாங் கூறுகையில், தைவான் சுந்திரத்தில் ஈடுபடும் பிடிவாத சக்திகளுடன் தொடர்புடைய தைவான் ஜனநாயக நிதியம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிதியம் ஆகிய நிறுவனங்கள், சர்வதேச அளவில் தைவான் பிரிவினை நடவடிக்கையில் ஈடுபட்டு, சீனப் பெருநிலப்பகுதி மீது அவதூறு பரப்பி, ஒரே சீனா என்ற கொள்கையைச் சீர்குலைக்க முயன்று வருகின்றன. அவை மீது தண்டனை மற்றும் தடை நடவடிக்கையை மேற்கொள்ள சீனா தீர்மானித்துள்ளது என்று தெரிவித்தார்.