தைவான் நீரிணையின் அமைதியைச் சீர்குலைப்பதன் பின்விளைவுக்கு அமெரிக்கா விலை கொடுப்பது உறுதி
2022-08-03 10:08:38

அமெரிக்க பிரதிநிதிகள் அவைத் தலைவர் பெலோசி சீனாவின் உறுதியான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஆகஸ்ட் 2ஆம் நாள் சீனாவின் தைவானுக்குச் சென்றார். அமெரிக்க-தைவான் தொடர்பு நிலையை உயர்த்தும் இச்செயல், அரசியல் துறையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகும். ஒரே சீனா கொள்கையையும், சீனா-அமெரிக்கா இடையேயான 3 கூட்டறிக்கைகளின் விதிகளையும் இது கடுமையாக மீறியுள்ளதோடு, சீன-அமெரிக்க உறவின் அரசியல் அடிப்படையையும் சீனாவின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டையும் கடுமையாகப் பாதித்துள்ளது. மிகவும் மோசமான இச்செயலின் பின்விளைவு கடுமையாக உள்ளது.  தைவான் சுதந்திர சக்திக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள், தைவான் நீரிணையின் அமைதி மற்றும் உலகின் அமைதியைச் சீர்குலைக்கும் மிகப் பெரிய சக்தி என்பது இது மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை பேணிக்காக்க சீனா இயன்ற அனைத்தையும் மேற்கொள்வது உறுதி.

தைவான் பிரச்சினை, சீனாவின் மைய நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அது சீனாவின் ஒரு பகுதியாகும். உலகளவில் 181 நாடுகள் ஒரே சீனா கொள்கையின் அடிப்படையில் சீனாவுடன் தூதாண்மை உறவுகளை நிறுவியுள்ளன. ஒரே சீனா கொள்கையானது சர்வதேச சமூகத்தின் பொதுவான ஒத்த கருத்து என்பதை இது காட்டுகிறது.

நடப்பு அமெரிக்க அரசு பதவியேற்ற பிறகு ஒரே சீனா கொள்கையைப் பின்பற்றி தைவான் சுதந்திரத்தை ஆதரிக்கப் போவதாக பல முறை வாக்குறுதி அளித்துள்ளது. அமெரிக்க அரசின் மூன்றாவது நிலை உயர் தலைவரான பெலோசி இது பற்றி அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அரசியல் சுயநலனுக்காக அவர் எதையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால், தைவான் அதிகார வட்டாரம் அமெரிக்காவைச் சாய்ந்து சுதந்திரத்தை நாட திரும்ப திரும்ப முயல்வதும், அமெரிக்காவின் சிலர் தைவானின் மூலம் சீனாவைக் கட்டுப்படுத்த முயல்வதும் தைவான் நீரிணையின் நிலைமை தீவிரமாவதற்கான அடிப்படை காரணிகளாகும் என்பதை பன்னாட்டுச் சமூகம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

அரசியல் நலனின் தாக்கத்தில் தைவான் மக்கள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெலோசியின் செயல் பற்றி தைவான் மக்கள் மட்டுமல்ல, அமெரிக்கர்கள் மற்றும் இதர நாட்டவர்களும் குறைகூறியுள்ளனர்.

பொது மக்களின் விருப்பமும் ஒட்டுமொத்த வளர்ச்சிப் போக்கும் தடுக்கப்படாது. எந்த சக்தியும் எவரும் தைவான் பிரச்சினையில் கேடு செய்தால் பாதிப்படைவது உறுதி.