கம்போடியாவில் சீன-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2022-08-04 11:15:25

சீன-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்டு 4ஆம் நாள் கம்போடியாவின் தலைநகர் பினோம்பெனில் நடைபெற்றது. இக்கூட்டம், கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்ட பிறகு இணையவழி சாரா முறையில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சர் வாங்யீ இக்கூட்டத்தில் பங்கெடுத்து, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும், பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை கூட்டாக முன்னேற்றுவது பற்றியும் ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் விவாதம் நடத்தியுள்ளார்.