தைவான் தீவின் அருகில் சீனாவின் இராணுவப் பயிற்சி
2022-08-04 15:16:20

படைப்பிரிவுகளின் கூட்டு போரியக்கத் திறனைச் சோதிக்கும் விதம், தைவான் தீவின் அருகிலுள்ள கடல் மற்றும் வான் பரப்பில் முழு நாள் இராணுவப் பயிற்சியை சீன மக்கள் விடுதலை படையின் கிழக்கு மண்டலப் பிரிவு மேற்கொண்டுள்ளது. பல்வகை போர் விமானங்கள் தைவான் தீவின் வடக்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வான் பரப்புக்குப் பறந்து சென்று, முன்னெச்சரிக்கை கட்டளை, வான் பரப்பு கட்டுப்பாடு போன்ற கடமைகளில் ஈடுபட்டன.

மேலும், ஆகஸ்டு 4ஆம் நாள் பிற்பகல் 1 மணியளவில் தொலைதூர குண்டு வீச்சு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தைவான் நீரிணையின் குறிப்பிட்ட பகுதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல் எதிர்பார்த்த விளைவை அடைந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைத் தலைவர் பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், சீனாவின் தைவான் பகுதியில் பயணம் மேற்கொண்ட செயல், சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை கடுமையாக ஊறுபடுத்தியுள்ளதாக சர்வதேச சமூகம் குறைகூறியதோடு, நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்க சீனா மேற்கொள்ளும் அனைத்து அவசிய நடவடிக்கைகளையும் உறுதியுடன் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.