அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசமைப்பிற்காக அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டுமென இலங்கை அரசுத்தலைவர் வலியுறுத்தல்
2022-08-04 17:11:43

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்கும் வகையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை நிறுவ, தன்னுடன் இணையுமாறு அரசியல் கட்சிகளுக்கு இலங்கை அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே புதன்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வுக்கூட்டத்தில்,  அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வழங்கிய விக்ரமசிங்கே, இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன், தான் ஏற்கனவே கலந்துரையாடலை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை தனது பொருளாதாரத்தை நவீனமயப்படுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வளர்ப்பதில்,   வெளிநாட்டுக் கடன்களை சார்ந்திருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வருட இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் என்று கூறினார். அதேவேளை, எரிபொருள் விநியோகத்தை அனைவருக்கும் நியாயமான முறையில் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விக்ரமசிங்கே மேலும் தெரிவித்தார்.