அமெரிக்காவின் வெளிப்படையான ஆத்திரமூட்டல்:வாங் யீ
2022-08-04 17:09:15

சீனாவின் இறையாண்மையை ஊறுபடுத்திய அமெரிக்காவின் ஆத்திரமூட்டல் செயல் குறித்து சீனாவின் நிலைப்பாட்டைச் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மேலும் விளக்கினார்.

ஆகஸ்டு 4ஆம் நாள் புனோம் பென் நகரில் நடைபெற்ற ஆசியான் ஒத்துழைப்புடன் தொடர்புடைய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டங்களில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

சர்வதேசச் சட்டத்தை அமெரிக்கா அவமதித்து, இருதரப்பு வாக்குறுதிகளை மீறி, சீன மக்களுக்கு வெளிப்படையாக ஆத்திரமூட்டலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு தரப்புகள் அமெரிக்காவின் இச்செயலைக் கூட்டாக எதிர்த்து, சீனாவின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து ஆதரித்து, தைவான் நீரிணை இரு கரை பிரதேசத்தின் அமைதியைக் கூட்டாகப் பேணிகாக்க வேண்டும் என்று வாங் யீ விருப்பம் தெரிவித்தார்.