கம்போடியத் தலைமையமைச்சர் வாங்யீயுடன் சந்திப்பு
2022-08-04 15:17:18

கம்போடியத் தலைமையமைச்சர் சம்தேக் ஹன் சென் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயுடன் ஆகஸ்டு 3ஆம் நாள் புனோம் பெனில் சந்திப்பு நடத்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு வெற்றிப் பெற சம்தேக் ஹன் சென் முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்தார். ஒரே சீனா என்ற கோட்பாட்டைக் கம்போடியா உறுதியாகப் பின்பற்றி, சீன உரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் எந்த கூற்றையும் செயலையும் உறுதியாக எதிர்க்கிறது என்று அவர் கூறினார்.

வாங்யீ கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை கம்போடியா உறுதியாகப் பின்பற்றுவதைச் சீனா பாராட்டுகிறது. கம்போடியாவின் வளர்ச்சிப் போக்கில், நம்பிக்கைக்குரிய கூட்டாளி மற்றும் உறுதியான ஆதரவாக சீனா திகழ்கிறது என்றார்.

மேலும், மியான்மார் பிரச்சினை, உக்ரைன் நெருக்கடி உள்ளிட்டவை குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளன.