பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் விரிவாக்கப் போக்கிற்கு சீனா ஆதரவு
2022-08-04 10:02:47

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யிங் அம்மையார் ஆகஸ்டு 3ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், இவ்வாண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடான சீனா, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் விரிவாக்கப் போக்கிற்கு ஆக்கமுடன் ஆதரவளித்து, “பிரிக்ஸ்+”என்ற ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றார்.

மேலும், பிரிகஸ் அமைப்புமுறை உருவாக்கப்பட்டது முதல் இதுவரை, வளர்ந்து வரும் சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் தலைவிதியுடன் நெருக்கமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், இன்னல்கள் மற்றும் அறைக்கூவல்களை ஒற்றுமையுடன் சமாளிக்கும் வகையில், பிரிக்ஸ் நாடுகள், இதர வளர்ந்து வரும் சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.