2022ஆம் ஆண்டு உலக இயந்திர மனிதன் மாநாடு
2022-08-05 15:47:51

2022ஆம் ஆண்டு உலக இயந்திர மனிதன் மாநாடு ஆகஸ்டு 18 முதல் 21ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. கருத்தரங்கு, பொருட்காட்சி, போட்டி ஆகிய 3 பகுதிகளும், தொடர்புடைய நிகழ்ச்சிகளும் நடப்பு மாநாட்டில் இடம்பெறுகின்றன. 23 சர்வதேச நிறுவனங்கள் இம்மாநாட்டுக்கு ஆதரவளித்துள்ளன.

சீனா மற்றும் வெளிநாடுகளின் மூத்த அறிஞர்கள், அறிவியலாளர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் முனைவோரின் பிரதிநிதிகள், இயந்திர மனிதன் தொழிலுக்கான சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 300க்கும் மேலானோர் இம்மாநாட்டில் பங்கெடுக்கவுள்ளனர். மேலும், 100க்கும் மேலான தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 500க்கும் மேலான உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

தவிரவும், மனித வடிவிலான இயந்திரக் காட்சிப் பகுதி இவ்வாண்டில் முதன்முறையாக உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.