சிங்காய்-திபெத் பீடபூமியில் 2ஆவது அறிவியல் ஆய்வின் சாதனைகள்
2022-08-05 15:25:38

சிங்காய்-திபெத் பீடபூமியில் நடத்தப்பட்ட 2ஆவது பன்னோக்கு அறிவியல் ஆய்வு, நீர் வளம் மற்றும் பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு திரை, பிரதேசத்தின் பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில சாதனைகளைப் பெற்றுள்ளது. இந்த அறிவியல் ஆய்வு பற்றி சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம், சீன அறிவியல் கழகம் ஆகியவை சிங்காய் மாநிலத்தில் 4ஆம் நாள் நடத்திய கல்வியியல் கருத்தரங்கில் இது தெரிய வந்துள்ளது.

சீன அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞர் கூறுகையில், நீர் வளப் பாதுகாப்பு, கார்பன் நிலைப்படுத்தல் மற்றும் காலநிலை சரிப்படுத்தல், அறிவியல் கற்பிப்பு மற்றும் பண்பாட்டுச் சேவை உள்ளிட்ட துறைகளில், சிறப்பான உயிரினப் பல்வகைமை கொண்ட சிங்காய்-திபெத் பீடபூமி பரந்தளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சுட்டிக்காட்டினார். இந்நிலையில், சிங்காய்-திபெத் பீடபூமி இயற்கை பாதுகாப்பு திரை மீட்புப் பணியை விரைவுபடுத்தவும், தேசிய பூங்காவை மையமாகக் கொண்ட இயற்கை பாதுகாப்பு மண்டல முறைமையை உருவாக்கவும் வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.