ஆசியான் சீனா ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2022-08-05 11:04:22

சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஆகஸ்ட் 4ஆம் நாள், கம்போடியாவின் தலைநகர் பினோம்பெனில் நடைபெற்ற ஆசியான் சீனா ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அவர் அப்போது கூறுகையில்,

இப்போது சர்வதேச நிலைமை வேகமாக மாறி வருகின்றது. இப்பிரதேசத்திலுள்ள பல்வேறு நாடுகளுடன் இணைந்து, பிரதேச அமைதியையும் நிதானம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றும் பொது நோக்கத்தில் ஊன்றி நின்று, கிழக்காசிய ஒத்துழைப்பை ஊக்குவிக்க சீனா விரும்புகின்றது என்றார்.

மேலும், கிழக்காசிய வளர்ச்சித் திட்டத்தை வகுப்பது, பிரதேச பொருளாதார ஒருங்கிணைப்பை முன்னேற்றுவது, நெருக்கடியைச் சமாளிக்கும் திறனை உயர்த்துவது, வளர்ச்சி வழிமுறை மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய 4 ஆலோசனைகளையும் வாங் யீ வழங்கினார்.