உலகளவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கையில் மிக அதிக நாடு அமெரிக்கா
2022-08-05 17:33:09

அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனிதச் சேவை அமைச்சகம் 4ஆம் நாள் குரங்கு அம்மையை அந்நாட்டில் பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.

புதிய புள்ளிவிவரங்களின் படி, உலகில் மொத்தம் 26 ஆயிரத்து 800 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 7 ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். அமெரிக்கா, உலகளவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கையில் மிக அதிக நாடாகும்.

புதிய ரக கரோனா வைரஸ் தோன்றிய போது அமெரிக்க அரசு அதனை உரிய முறையில் கையாளத் தவறியிருந்தது என்று நிபுணர்கள் சுட்டிக்காடினர். அதைப் போல் தரவு சேகரிப்பு, பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் ஆகியவற்றில் அமெரிக்கா மீண்டும் தாமதம் மற்றும் குழப்பத்துக்குள் சிக்கியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.