ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்குப் பல நாடுகள் ஆதரவு
2022-08-05 17:29:38

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் பெலோசியின் தைவான் பயணம் குறித்து பல நாட்டு அரசுகள் ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றி நிற்பதாக உறுதிப்படுத்தின.

ஒரே சீனா என்ற கோட்பாட்டை ஆதரித்து ஐ.நா. சாசனத்தில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளின் இறையாண்மைக்கும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பு அளிக்கும் உறுதியான வாக்குறுதியை இலங்கை அரசுத் தலைவர் விக்கிரமசிங்கே 4ஆம் நாள் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

பெலோசியின் தைவான் பயணம், அப்பட்டமான ஆத்திரமூட்டலாகும். ஆசியாவின் பாதுகாப்பை நேரடியாகச் சீர்குலைக்கும் என்று ரஷிய பாதுகாப்பு கூட்டத்தின் துணைத் தலைவர் மெட்வதேவ் தெரிவித்தார்.