பெலோசிக்கு தடை விதிக்கும் சீனா
2022-08-05 17:34:32

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் நான்சி பெலோசி, சீனாவின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், தைவானில் பயணம் மேற்கொண்டது, சீன உள்விவகாரங்களில் தலையிட்ட செயலாகும். இது, சீன இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு விளைவித்துள்ளது. பெலோசியின் ஆத்திரமூட்டல் செயல் குறித்து, சீன மக்கள் குடியரசின் தொடர்புடைய சட்டத்தின்படி, பெலோசி மற்றும் அவரது உறவினர்களுக்குத் தடை விதிக்க சீனா திட்டமிட்டுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 5ஆம் நாள் அறிவித்தார்.