ஒரே சீனா கோட்பாட்டை மீறிய அமெரிக்காவுக்கு எதிர்ப்பு
2022-08-05 11:00:56

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் பெலோசி 3ஆம் நாள் தைவானில் பயணம் மேற்கொண்டார். ஒரே சீனா என்ற கோட்பாட்டை மீறிய மோசமான நடவடிக்கை இதுவே ஆகும்.

அவரின் இப்பயணம் தொடங்கிய பிறகு, தைவான் தீவின் அருகில் தொகுதியான ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள சீன ராணுவ வட்டாரம் அறிவித்தது. பதில் நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் சீனாவின் பல வாரியங்களும் அறிவித்துள்ளன. சீன இறையாண்மையையும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டையும் பேணிக்காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் இவையாகும். இவை மிகவும் நியாயமானவை. சீன மைய நலனை மீறி, தைவான் நீரிணை அமைதியையும் நிதானத்தையும் சீர்குலைக்கும் அமெரிக்காவும் தைவானும் இதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.

தைவான் சீனாவைச் சேர்ந்தது. வரலாற்றில் சீனாவின் மீது அமெரிக்கா ஏற்படுத்திய அறைகூவல்களின் மோசமான முடிவுகளை அமெரிக்கா ஏற்கனவே சந்தித்துள்ளது. இம்முறையும் விதி விலக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.