ரெப்போ வட்டி 0.5% உயர்வு: இந்திய மத்திய வங்கி
2022-08-05 17:39:53

இந்தியாவின் மத்திய வங்கி வெள்ளிக்கிழமை ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக ஆக்கி, 5.4 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. இது சந்தையின் எதிர்பார்ப்பன 25-35 அடிப்படை புள்ளிகளை விட சற்று அதிகமாகும். 

மூன்று நாள் நிதிக் கொள்கை கூட்டத்தில் , ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தற்போது, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பி ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகபட்சமாக உள்ளது.

வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், பணவீக்க நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்காக, தளர்ச்சிக்கு கொள்கையை திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மத்திய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.