தன்னை அமைதிக் காப்பாளர் என கூறிச் செயலில் அமைதியைச் சீர்குலைக்கும் அமெரிக்கா
2022-08-06 17:35:15

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் நான்சி பெலோசி, சீனாவின் தைவானில் பயணம் மேற்கொண்டு தைவானின் அமைதியை முன்னேற்றுவதாகப் பறைசாற்றினார். நெருக்கடியை உருவாக்கும் அமெரிக்கா தன்னை ஓர் அமைதிக் காப்பாளராக காட்ட முயல்கிறது.  ஒரே சீனா என்ற கொள்கைக்கு உறுதியாக ஆதரவளிக்குமென கடந்த சில நாட்களில் உலகின் நூற்றுக்கும் அதிகமான நாடுகள் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. தைவான் நீரிணை நிலைமை தீவிரமாகுவதற்கான உண்மையை தெளிவாக அறிந்து கொள்வது சர்வதேச சமூகம் சீனாவுக்கு உறுதியாக ஆதரவளிப்பதற்குக் காரணமாகும். தைவான் மூலம் சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவின் பெரிய அரசியல் ஆத்திரமூட்டல் பெலோசியின் தைவான் பயணமாகும். அமெரிக்காவின் இச்செயல் சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டைக் கடுமையாக மீறியுள்ளது. சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுக்கான விதிகளுக்கும் கடுமையாகப் புறம்பானது.

நவீன தூதாண்மை என்ற ஐரோப்பிய விமர்சன இணையத்தளத்தில் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில், அமைதிக் காப்பாளருக்குப் பதிலாக, அமெரிக்கா எப்போதும் மோதலை உருவாக்குபவர் என உலகம் முழுவதிலும் அறியப்பட்டுள்ளது.