ஜப்பானிலுள்ள அமெரிக்கப் படைத் தளத்தில் ஒருவருக்குக் குரங்கம்மை பாதிப்பு
2022-08-06 18:18:58

ஜப்பானிலுள்ள அமெரிக்கப் படையின் யோகோட்டா தளத்தில் ஆண் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் 5ஆம் நாள் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் உறுதி செய்யப்பட்ட 3ஆவது குரங்கு அம்மை பாதிப்பு இதுவாகும்.

இந்நோயாளி அண்மையில் ஜப்பானிலியிருந்து வெளியேறவில்லை. ஆனால் அவர் வெளிநாட்டிலிருந்து வருபவருடன் தொடர்பு கொண்டார்.