உலக வளர்ச்சியில் கவனத்தை குவிக்கும் சீன – ஆசியான் ஊடகங்கள் மற்றும் சிந்தனைக் கிடங்குகள் மன்றம்
2022-08-06 19:29:48

2022ஆம் ஆண்டு சீன – ஆசியான் ஊடகங்கள் மற்றும் சிந்தனைக் கிடங்குகளின் மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது.  உலக வளர்ச்சியில் பகிர்வு எதிர்காலம் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை என்பது இந்த மன்றக் கூட்டத்தின் கருப்பொள் ஆகும். 

சீனா மற்றும் ஆசியானின் 10 நாடுகளைச் சேர்ந்த  அதிகாரிகள், முக்கிய ஊடகங்களின் இயக்குநர்கள், சிந்தனைக் கிடங்குகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோர், இக்கூட்த்தில் பங்கேற்றபோது, உலக வளர்ச்சி முன்னெடுப்பு, சீன – ஆசியான் விரிவான நெடுநோக்கு கூட்டாளியுறவு உள்ளிட்டவை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டர்.

2021 செப்டம்பரில் சீனா, உலக வளர்ச்சி முன்னெடுப்பை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்த முன்னெடுப்புக்கு சர்வதேச சமூகத்தின் ஆக்கப்பூர்வமான வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளன.