காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 15பேர் பலி
2022-08-07 16:55:58

ஆகஸ்ட் 5ஆம் நாளிரவு முதல் 6ஆம் நாள் காலை வரை, காசா பிரதேசம் மீது இஸ்ரேல் இராணுவம் பத்துக்கும் மேலான வான் தாக்குதல்கள் நடத்தியது. இதில், 15பேர் உயிரிழந்தனர், 125பேர் காயமுற்றனர் என்று பாலஸ்தீனத்தின் காசா சுகாதார துறை 6ஆம் நாள் தெரிவித்தது.

மேலும், குறைந்தது 650 கட்டிடங்கள் நாசமடைந்தன என்று காசா பிரதேசப் பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

தவிரவும், இஸ்ரேல் தேசிய பாதுகாப்புப் படை 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அந்நாட்டின் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும்  காசாவிலுள்ள இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்த இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது என்று தெரிவித்தது.