தைவான் பிரச்சினை குறித்து அமெரிக்காவின் தவறுகள்
2022-08-08 09:56:27

ஆக்ஸ்ட் 7ஆம் நாள் சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ வங்காளதேசத்தில் பயணம் மேற்கொண்டார். அமெரிக்க பிரதிநிதிகள் அவைத் தலைவர் நான்சி பெலோசி சீனாவின் தைவானில் பயணம் மேற்கொண்டது குறித்து குறிப்பிடுகையில், சீன உள் விவகாரங்களில் தலையீடு செய்தது, தைவான் சுதந்திர சக்திக்கு ஆதரவு அளித்தது, தைவான் நீரிணை அமைதியைச் சீர்குலைத்தது ஆகிய 3 தவறுகளை அமெரிக்கா செய்துள்ளது என்று வாங் யீ தெரிவித்தார்.

இது குறித்து சீனாவின் நிலைப்பாடு உறுதியாகவும் நிதானமாகவும் உள்ளது. சீன இறையாண்மையையும் உரிமை பிரதேச ஒருங்கிணைப்பையும் பேணிக்காக்கும் வகையில், சீனா நேர்மையான சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கைகள், தைவான் நீரிணை அமைதியையும் பிரதேச நிதானத்தையும் பாதுகாக்கும் என்று அவர் தெரிவித்தார்.