வங்காளத் தேசத் தலைமையமைச்சர்-வாங் யீ சந்திப்பு
2022-08-08 16:30:04

வங்காளத் தேசத் தலைமையமைச்சர் ஹாசினா அம்மையார் ஆக்ஸ்ட் 7ஆம் நாள் டாக்காவில் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயைச் சந்தித்துரையாடினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், சீனா, எப்போதும் வங்காளத் தேசத்தின் நம்பத்தக்க கூட்டாளியாகும் என்று தெரிவித்தார். வங்காளத்துடன் வளர்ச்சி அனுபவம் மற்றும் முன்னேறிய தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அடிப்படை வசதிகளின் கட்டுமானம், எண்ணியல் பொருளாதாரம், பசுமை வளர்ச்சி, தூய்மை எரியாற்றல் முதலிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் சீனா விரும்புகிறது. 21ஆம் நூற்றாண்டு, வளரும் நாடுகள் வளர்ச்சியுறும் காலமாகும். அவை கூட்டாக நவீனமயமாக்கம் நோக்கிச் செல்வது, மனித குல நாகரிகப் போக்கில் மாபெரும் முன்னேற்றம் ஆகும் என்று வாங் யீ தெரிவித்தார்.

ஹாசினா கூறுகையில், வங்காளத் தேசம் ஒரே சீனா கொள்கையைப் பின்பற்றி, குறிப்பிட்ட சில நாடுகளின் ஆத்திரமூட்டல் செயல்களுக்கு ஆதரவளிக்காது. சீனாவுடன் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சி சூழலைப் பேணிக்காக்க வங்காளத் தேசம் விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.