அமெரிக்காவில் குரங்கம்மையின் பரவல் நிலைமை
2022-08-08 16:14:54

அமெரிக்க அரசு, சோதனைகளை வலுப்படுத்துவதன் மூலம் குரங்கம்மையைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் இப்பணி மிக சிக்கலாக இருக்கும் என்று ஆகஸ்ட் 7ஆம் நாள், அமெரிக்க உணவு மற்றும் மருத்து நிர்வாக பணியகத்தின் முன்னாள் தலைவர் ஸ்கோத் கோத்லெப் தெரிவித்தார்.

குறிப்பிட்ட மக்களின் மீது குரங்கம்மை சோதனை மேற்கொள்வதில் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால், குரங்கம்மை மேலும் பரவலான அளவில் பரவியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தரவுகளின் படி, ஆகஸ்ட் 5ஆம் நாள் வரை, அமெரிக்காவில் 7510 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.