பெலோசி ஆதரித்து வரும் ஜனநாயகத்தின் உண்மை என்ன?
2022-08-08 20:38:20

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் நான்சி பெலோசியின் தைவான் பயணம் ஜனநாயகம் என்ற பெயரில் ஜனநாயகத்துக்கு ஆதரவளிப்பதாகப் பறைசாற்றியது. அவரின் இப்பயணம் சொந்த நலன், அரசியல் கட்சியின் நலன் மற்றும் அமெரிக்காவின் நலனுக்காக தான் இருக்கும் என்று தைவானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இது அமெரிக்க மக்களுக்கும் நன்கு தெரிந்துள்ளது. சீன-அமெரிக்க உறவின் முறிவுக்கு பெலோசி பொறுப்பேற்க வேண்டுமா இல்லையா என்று 5ஆம் நாள் நடைபெற்ற வெள்ளை மாளிகையின் செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர் ஒருவர் கேட்டார். பெலோசியின் தைவான் பயணம் தைவான் நீரிணை நிலைமையைத் தீவிரமாக்கியுள்ளது என்றும் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார். ஜனநாயகம் என்ற பெயரில் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் அமெரிக்காவின் செயல்கள் நிறைய உண்டு. அவற்றால் ஏற்பட்ட சீர்குலைவுகள் பரவலாகப் பரவியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் மத்திய ஆசியா முதல் வட ஆப்பிரிக்கா வரை, கிழக்கு ஐரோப்பா முதல் லத்தின் அமெரிக்கா வரை,  'அமெரிக்க பாணி ஜனாயகம்' ஏற்படுத்தியுள்ள தீங்கு எங்கும் காணப்படுகிறது.