அமெரிக்கப் பொருளாதாரம் பற்றிய கருத்து கணிப்பு
2022-08-08 16:40:42

அமெரிக்காவின் என்.பி.சி நிறுவனமும் இப்சோஸ் நிறுவனமும் கூட்டாக மேற்கொண்ட புதிய பொது மக்கள் கருத்து கணிப்பின்படி, அமெரிக்கப் பொருளாதாரம் மோசமகி வருகின்றது என்று 69 விழுக்காடான அமெரிக்க மக்கள் கருதுகின்றனர். 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்த விகிதம் மிக உயர்வானது.

மேலும், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் மேற்கொண்டு வருகின்ற பணிகளுக்கு 37 விழுக்காடான மக்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர். 62 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பண வீக்கத்தை பைடன் சமாளிக்கும் திறன் குறித்து, 29 விழுக்காட்டினர் மட்டுமே பாராட்டு தெரிவித்தனர்.