புதிதாக ஏவப்பட்ட சிறிய செயற்கைக்கோள்கள் இனி பயன்படுத்த இயலாது : இஸ்ரோ அறிவிப்பு
2022-08-08 09:58:51

ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்ட இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் பயனற்ற நிலைக்குச் சென்றுவிட்டன என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-02 மற்றும் சுதந்திர செயற்கைக்கோளான AzadiSAT ஆகியவை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

AzadiSAT என்பது ஆகஸ்ட் 15 நாளன்று இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 750 பெண் மாணவர்களால் உருவாக்கப்பட்ட CubeSat செயற்கைகோளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.