ஜிஹாத் புனித போர் அமைப்பு இஸ்ரேலுடன் போர் நிறுத்தம்
2022-08-08 09:59:41

பாலஸ்தீனத்தின் இஸ்லாமிய ஜிஹாத் புனித போர் அமைப்பு இஸ்ரேலுடன் ஆகஸ்டு 7ஆம் நாளிரவு போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டியது. அன்றிரவு 11 மணி 30 நிமிடத்தில் இவ்வுடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்பட்டது. போர் நிறுத்தத்துக்கான எகிப்தின் இணக்க முயற்சிக்கு இரு தரப்பும் வரவேற்பைத் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் போர் விமானங்கள் ஆகஸ்டு 5ஆம் நாள் காசா பிரதேசத்தின் மீது வான் தாக்குதல் தொடுத்தன. பழி வாங்கும் விதம், ஜிஹாத் புனித போர் அமைப்ப்பு இஸ்ரேலின் மீது ராக்கெட்டுக் குண்டுகளை வீசியது. 3 நாட்கள் நீடித்த மோதலில் 44 பேர் உயிரிழந்தனர்.