2022ஆம் ஆண்டு உலக மனித இயந்திர மாநாடு
2022-08-08 18:54:24

2022ஆம் ஆண்டு உலக இயந்திர மனிதன் மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பு ஆகஸ்ட் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஆகஸ்ட் 18முதல் 21ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள நடப்பு மாநாட்டின் கருப்பொருள், கூட்டாக உருவாக்குதல், பகிர்ந்துகொள்ளுதல், கலந்தாய்வு மற்றும் கூட்டு வெற்றி பெறுதல்.

உலகளவில் 23 சர்வதேச நிறுவனங்கள் இம்மாநாட்டுக்கு ஆதரவு அளித்துள்ளன. 15 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300க்கும் மேலான முக்கிய விருந்தினர்கள், இம்மாநாட்டின் கருத்தரங்கில், இயந்திர மனிதன் துறையின் முன்னேறிய வளர்ச்சி சாதனைகள், வளர்ச்சிப் போக்கு ஆகியவை குறித்து கருத்துகளைப் பரிமாறி கொள்வர்.

தவிர, 130க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களின் 500 தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இதில், 30க்கும் மேலான தயாரிப்புகள் உலகளவில் முதன்முறையாக வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.