தைவான் நீரிணை நிலைமையை தீவிரமாக்கும் அமெரிக்கா
2022-08-08 19:04:00

தைவான் தொடர்பான அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுகளைக் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பின் 8ஆம் நாள் குறிப்பிடுகையில், தைவான் நீரிணை நிலைமையை மாற்றி அதைத் தீவிரமாக்குபவர் அமெரிக்கா தான். காரணமின்றி ஆத்திரமூட்டலை மேற்கொண்டது அமெரிக்கா தான். இது, அமெரிக்காவால் மறைக்க முடியாத உண்மை என்றார்.

அவர் மேலும் கூறுகையில், பெலோசியின் தைவான் பயணத்தை உறுதியாக எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டை சீனா 4 திங்கள்களுக்கு முன்பே பல்வேறு வழிமுறைகளின் மூலம் அமெரிக்க தரப்பிடம் தெளிவுபட பலமுறை கூறியிருந்தது. அவரின் பயணம் ஒரே சீனா என்ற கொள்கை மற்றும் 3 சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளின் விதிகளுக்குப் புறம்பானது. இது அமெரிக்கா தனது ஆத்திரமூட்டல் செயலை தீவிரமாக்குவதாக உள்ளது. இதனால் ஏற்பட்ட அனைத்து பின்விளைவுகளுக்கும் அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.