அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா ஒத்துழைப்புக்குச் சீனா எதிர்ப்பு
2022-08-09 10:30:24

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவை மேற்கொண்டுள்ள அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய ஒத்துழைப்பைச் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று 8ஆம் நாள் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் 10ஆவது பரிசீலனை மாநாட்டில் படைக்கலக்குறைப்பு விவகாரங்களுக்கான சீனத் தூதர் லி சோ சிறப்புரையில் கூறினார்.

அணுஆயுத நாடான அமெரிக்காவும் பிரிட்டனும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆற்றல் உலைகள் மற்றும் டன் அளவிலான ஆயுதங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணு ஆயுதம் அல்லாத நாடுகளுக்குக் கொடுக்க முடிவு செய்வது, கடுமையான அணு பரவல் இடர்பாட்டை ஏற்படுத்தி, இரு நாடுகளின் இரட்டை வரையறையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன. மூன்று நாடுகளின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு, பல்வேறு ஆசிய-பசிபிக் நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்தி, அணு ஆயுதம் இல்லாத தென் பசிபிக் மற்றும் தென்கிழக்காசியாவுக்குக் கடுமையான தீங்கு விளைவித்துள்ளது என்று அவர் கூறினார்.