டொனால்டு டிரம்பின் வீட்டில் எஃ.பி.ஐ. திடீர் சோதனை
2022-08-09 17:15:22

ஃபுளோரிடா மாநிலத்தின் பால்ம் கடற்கரையில் உள்ள தனது வீட்டில் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் முன்னறிவிப்பு இன்றி சோதனை மேற்கொண்டனர் என்று முன்னாள் அரசுத் தலைவர் டிரம்ப் 8ஆம் நாள் தெரிவித்தார்.

அமெரிக்கக் புலனாய்வுப் பணியகமும் நீதித் துறை அமைச்சகமும் இது குறித்து வெளிப்படையாக ஏதும் தெரிவிக்கவில்லை.

மேலும், அமெரிக்க நீதித் துறை மேற்கொண்டு வரும் புலனாய்வுகள், டிரம்புடன் தொடர்புடையவை. தனது வீட்டில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, டிரம்ப் நியூயார்க்கில் இருந்தார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.