மால்டா மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம் அனுப்புதல்
2022-08-09 15:53:13

மால்டாவில் செயின்ட் மார்கரெட் கல்லூரியின் உயர்நிலைப் பள்ளியின் ‘சீனா கார்னர்’ நிகழ்ச்சியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பதில் அண்மையில் கடிதம் அனுப்பினார். மால்டாவின் மேலதிக இளைஞர்கள் இரு நாடுகளிடையேயான மக்கள் தொடர்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தில் பங்கேற்குமாறு அவர் ஊக்குவித்தார்.   

இரு தரப்புகளின் கூட்டு முயற்சியில், பள்ளியிலுள்ள சீனா கார்னர் நிகழ்ச்சி, மால்டா இளைஞர்களிடையே சீனா பற்றிய அறிவை அதிகரிப்பற்கும் இரு நாட்டின் நட்புறவை மேம்படுத்துவதற்கும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்றியுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் சீனாவில்  கல்வி பயின்று பரிமாற்றம் செய்வதற்கு ஷிச்சின்பிங் வரவேற்பு தெரிவித்தார். 

2010ஆம் ஆண்டு சீன தரப்பின் ஆதரவில் இந்தப் பள்ளியில் சீனா கார்னர் நிறுவப்பட்டது. அண்மையில் அதைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு அனுப்பிய கடிதத்தில் சீனப் பண்பாடு மீதான ஆர்வத்தைத் தெரிவித்ததுடன், பகிர்வு எதிர்காலம் கொண்ட சமூகம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுகள் ஆகியவற்றைப் பாராட்டவும் செய்தனர்.