மனித உரிமையைக் கடுமையாக மீறிய அமெரிக்கா
2022-08-09 14:10:58

மத்திய கிழக்கு பிரதேசத்தில் அமெரிக்கா மனித உரிமையைக் கடுமையாக மீறிய குற்றச் செயல்கள் என்ற ஆய்வறிக்கையை சீன மனித உரிமை ஆய்வகம் 9ஆம் நாள் வெளியிட்டது. போர் ஏற்படுத்துவது, மனித நேயத்தைச் சீர்குலைப்பது, காரணமின்றி சிறையில் வைப்பது, கட்டற்ற முறையில் சித்தரவதை மேற்கொள்வது, தாறுமாறாக ஒரே தரப்பு தடை நடவடிக்கை மேற்கொள்வது ஆகிய குற்றங்களை அமெரிக்கா இப்பிரதேசத்தில் மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கைகள் மனித உரிமையை கடுமையாகச் சீர்குலைத்து, நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

போர் ஏற்படுத்தி, பொது மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கா, உயிருரிமையையும் வாழும் உரிமையையும் மீறியுள்ளது. அமெரிக்கா நிறுவப்பட்ட கடந்த 246 ஆண்டுகளில், 20 ஆண்டுகளில் மட்டும் போரில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா, உண்மையான போர் நாடாக மாறியுள்ளது என்று இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டது.

அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் இதழ் வெளியிட்ட தரவுகளின் படி, 2001ஆம் ஆண்டுக்கு பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா உலகத்தின் 40 விழுக்காடான நாடுகளில் போர் தொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.