உக்ரேனில் சபொரோழ் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு
2022-08-09 16:00:48

சபொரோழ் அணு மின் நிலையத்தின் மீது உக்ரேன் ராணுவம் 7ஆம் நாள் நடத்திய பீரங்கி தாக்குதலில், சபொரோழ் மாநிலம் மற்றும் ஹால்சோன் மாநிலத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் உயர் அழுத்த மின் கம்பி வடம் நாசமடைந்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் 8ஆம் நாள் தெரிவித்தது.

ரஷிய அரசுத் தலைவரின் செய்தித்தொடர்பு செயலர் பெஸ்கோவ் அதே நாள் கூறுகையில், உக்ரேன் ராணுவம் அணு மின் நிலையத்தின் மீது பீரங்கி தாக்குதல் மேற்கொள்வது மிகவும் ஆபத்தான செயலாகும். இது ஐரோப்பா உள்ளிட்ட மிகப் பரந்த நிலப்பரப்புடைய பிரதேசத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவித்தார்.

இதனிடையில், சபொரோழ் அணு மின் நிலையத்தில் ரஷியா கண்ணி வெடி குண்டுகளைப் புதைத்துள்ளது என்றும் தேவைப்படும் போது இவற்றை வெடிக்க ரஷியா தயாராக உள்ளது என்றும் உக்ரேன் தேசிய அணு மின் நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவலை மேற்கோள்காட்டி உக்ரேன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.