வளரும் நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு திறனுக்கான உதவி
2022-08-10 10:14:54

ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி சாங் ஜுன் 9ஆம் நாள் நடைபெற்ற பயங்கரவாத செயல்களால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் கூட்டத்தில் உரை நிகழ்த்தி, பயங்கரவாதத்தை அழிப்பது பற்றி சீனாவின் கருத்துகளை விளக்கினார். வளரும் நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்துவதற்கு உதவியளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை வரையறையைக் கைவிட வேண்டும். ஐ எஸ், ஆல்கய்தா, கிழக்கு தூர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் ஆகியவற்றை அழிப்பதில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.