அமெரிக்க வறுமை குழந்தைகளின் விகிதம் 16.6ஆக உயர்வு
2022-08-10 15:12:28

அமெரிக்க குழந்தைகள் பாதுகாப்பு நிதியத்தின் புதிய தரவுகளின்படி, இவ்வாண்டு பிப்ரவரி திங்கள் வரை அமெரிக்காவில் வறுமையால் வாடும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 23.1 இலட்சத்தைத் தாண்டியது. அவர்களில் 71 விழுக்காட்டு குழந்தைகள் நிறமுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் அடிப்படை உணவு, உடை பிரச்சினையை, நோய் பரவல் தீவிரமாக்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.