2022 பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டி செப்டம்பர் தொடக்கம்
2022-08-10 19:45:46

2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 1ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை இணைய வழி மூலம் நடைபெறவுள்ளது. சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இணையத்தின் மூலம்  நிகழ்நேரத்தில் அல்லது காணொளி பதிவேற்றத்தில் போட்டியிடுவர்.

பிரேக் டான்ஸ், சர்வதேச சதுரங்கம், குங்ஃபூ ஆகிய மூன்று வகைப் போட்டிகள் இதில் இடம்பெற்றுள்ளன.