இலங்கையில் புதைபடிவ எரிபொருளின் நுகர்வை குறைக்க மின்சார முச்சக்கர வாகனம் அனுமதி
2022-08-10 14:54:18

புதைபடிவ எரிபொருட்களின் நுகர்வை குறைப்பதற்காக இலங்கையில் மின்சார முச்சக்கர வாகனங்களை பதிவு செய்வதற்கு இலங்கையின் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.

தற்போது, இலங்கையின் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, மின்சார முச்சக்கர வாகனங்களை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை  அடுத்து, மின்சார முச்சக்கர வாகன பதிவுகளை அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வாகனங்கள் தற்போது இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. மேலும் அவை பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.