உலகளவில் 2ஆம் இடம் பிடித்த சீன அணு மின்னாக்கிகளின் எண்ணிக்கை
2022-08-10 10:17:06

2022ஆம் ஆண்டு ஜுன் வரை, சீனாவில் 54 அணு மின்னாக்கிகள் இயங்கி வருகின்றன. 23 அணு மின்னாக்கிகள் கட்டியமைக்கப்பட்டு வருகின்றன. இவை, உலகளவில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளன என்று தேசிய அணு பாதுகாப்பு பணியகத்தின் துணை தலைவர் டாங் போ 9ஆம் நாள் 29ஆவது சர்வதேச அணு திட்டப்பணி கூட்டத்தின் துவக்க விழாவில் அறிமுகப்படுத்தினார்.

எரியாற்றல் விநியோகம், சுற்றுச்சூழல் மேம்பாடு, கார்பன் வெளியேற்ற உச்சநிலை மற்றும் சமநிலை தொடர்பான இலக்குகளை நிறைவேற்றுவது முதலியவற்றுக்கு அணு மின் வளர்ச்சி, ஆக்கப்பூர்வப் பங்கு ஆற்றியுள்ளது. 2025ஆம் ஆண்டில் சீனாவில் அணு மின்னாக்கிகளின் மொத்த திறன் 7 கோடி கிலோவாட் எட்டுமெனவும் மதிப்பீடு செய்யப்பட்டது.