தைவான் பிரச்சினை மற்றும் புதிய யுகத்தில் சீனாவின் ஒன்றிணைப்பு என்ற வெள்ளையறிக்கை
2022-08-10 10:54:54

ஆக்ஸ்ட் 10ஆம் நாள், சீன அரசவயைின் தைவான் விவகார அலுவலகமும், தகவல் தொடர்பு பணியகமும் தைவான் பிரச்சினை மற்றும் புதிய யுகத்தில் சீனாவின் ஒன்றிணைப்பு என்ற வெள்ளையறிக்கையை வெளியிட்டது.

பண்டைக்காலத்திலிருந்து, தைவான் சீனாவைச் சேர்ந்தது. ஐ.நா மாநாட்டின் 2758ஆவது தீர்மானம், ஒரே சீனா என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தியது. ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாகவும், சர்வதேச உறவுக்கான அடிப்படை கோட்பாடாகவும் இருக்கிறது. எப்போதுமே சீனாவைச் சேர்ந்த ஒரு பகுதியான தைவான் தனி நாடு அல்ல. அமைதியான ஒன்றிணைப்புக்கு வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம். ஆனால் தைவான் சுதந்திர சக்திகளுக்கு எந்த ஒரு வாய்ப்பை கொடுக்க மாட்டோம் என்று இவ்வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.