எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து வரும் சீன வெளிநாட்டு வர்த்தகம்
2022-08-10 15:00:25

சீன ஏற்றுமதித் துறை கடந்த ஜுலை திங்களில் 33296 கோடி அமெரிக்க டாலரை எட்டி, 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.  சீன சுங்கத் துறைத் தலைமையகம் வெளியிட்ட இந்த புள்ளிவிவரம் முன்பு எதிர்பார்த்ததை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி விரைவாக மீண்டு வருவது, சீன வெளிநாட்டு வர்த்தகத் துறையின் இச்சாதனைக்கு முக்கியக் காரணாகும்.

உதாரணமாக, ஷாங்காயில் கோவிட்-19 பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு, மே திங்களின் பிற்பாதி தொடங்கி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி படிப்படியாக மீட்சி அடைந்துள்ளது. ஜுனில், ஷாங்காயின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்தது. ஜுலையில், ஷாங்காய் துறைமுகத்தில் கொள்கலன்களைக் கையாளும் திறன், 43லட்சத்தைத் தாண்டி, வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது. ஷாங்காயில் மீட்சியடைந்து வரும் வேகம், சீனப் பொருளாதார மீட்சிப் போக்கில் ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளது.

முன்னதாக, 2ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சியில், உலகின் 61 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1955 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 2,800க்கும் அதிகமான வணிகச் சின்னங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன. நுகர்வுப் பொருட்காட்சி, சீனா வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவதில் ஒரு முக்கிய அறிகுறியாகும். சீனச் சந்தையின் எதிர்காலம் மீது பிரான்ஸ் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது என்று சீனாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்தார்.

சீனா தொடர்ந்து திறப்பை விரிவாக்குவது, சீனாவுக்கு மட்டுமல்லாமல், உலகிற்கு நன்மை அளிக்கும். மேலும், இது, வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு மேலதிக வாய்ப்புகளையும்  கொண்டு வரும்.