சீன-தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2022-08-10 16:38:35

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 9ஆம் நாள் ஷன்டொங் மாநிலத்தின் ஜின்டௌ நகரில் சீனாவில் பயணம் மேற்கொண்ட தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க் ஜின்னுடன் நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாட்டுறவின் 30 ஆண்டுகால அனுபவங்களைத் தொகுத்து இரு தரப்பும் வளர்ச்சிக்கான சரியான திசையை புரிந்து கொண்டு கூட்டு வெற்றி பெறும் அடுத்த 30 ஆண்டுகாலத்தைப் படைக்க வேண்டும் என்று வாங்யீ வலியுறுத்தினார்.

சீன-தென் கொரிய தாராள வர்த்தக உடன்படிக்கை பற்றிய 2ஆவது சுற்று பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி கூடிய விரைவில் ஒத்த கருத்தை எட்டுவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மேலும், நிலையான தொழில்துறை விநியோக சங்கிலியைப் பேணிக்காப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. தொழில்துறை விநியோக சங்கிலியின் முழுமை, பாதுகாப்பு, வசதி, திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையைப் பேணிக்காப்பதில் முயற்சி செய்ய வேண்டும் என்று இரு தரப்பும் தெரிவித்துள்ளன.